கண்ணாடி

Tuesday, August 03, 2010

தனியே...

இரவுப்பேருந்து
வேலை தேடி கிராமத்தை விட்டு நகருக்குப்பயனம்,
சென்றது நான் மட்டும் தான்.
ஆனால் என் இதயத்தோடு பயனித்தது
என் பெற்றோர்,
என் சகோதிரி, அவள் வளர்த்த செல்ல நாய்,
நான் வளர்த்த ஆடு, அது ஈண்ற குட்டி,
என் வீட்டு தென்னை, அதன் கீற்றில் வேய்ந்த குடிசை,
ஆற்றங்கரை பிள்ளையார், அச்சமூட்டும் அய்யனார்..
இத்தனை சுமந்தும், கணக்கவில்லை என் இதயம்.
யார் சொன்னது, எனக்கு தனிமை என்று..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home