கண்ணாடி

Tuesday, December 19, 2006

சந்திப்பு

கணிணி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு, அவள் குழந்தை அனுப்பும் eMail:

"பிறந்ததிலிருந்து Crecheல் வளர்கிறேன் நான்
நான் வளர்ந்த பிறகு முதியோர் இல்லத்தில் வாழ போகிறாய் நீ
எப்பொழுது சந்திப்போம் நாம்"

Tuesday, December 12, 2006

நிழல்

நான் பிறந்த நாள் முதல் என்னுடன் வரும் நிழலே
உன்னை நான் என்று நினைத்திருந்தேன்.

நான் இறந்த பிறகு, என்னுடன் நீ வரவில்லை.
பிறகு தான் தெரிந்தது,
நீ நான் இல்லை, என் உடம்பு என்று.