கண்ணாடி

Monday, May 19, 2008

குடிசை

எங்கள் கிராமத்து குடிசைகளில்
கூரையில் கூட ஜன்னல்கள் உண்டு.
மேகமே திரை சீலையாய்,
நட்சத்திரமே அலங்கார விளக்காய்,
கொட்டும் மழையே அழையா விருந்தாளியாய்,
ரம்மியமான வாழ்க்கை.