கண்ணாடி

Friday, February 23, 2007

தேர்தல் பிரச்சாரம்

பலியிடும் முன் ஆடுகளுக்கு
நடக்கும் அர்ச்சனை.

Wednesday, February 21, 2007

உபதேசம்

"நல்லது நினைத்தால்
நல்லது நடக்கும்"
உபதேசித்தார் ஆசிரியர்.
நினைத்தேன்.
மாற்றலாகி சென்று விட்டார்.

Monday, February 12, 2007

இறைவன்

உலகை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
இயற்கையை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
மனிதனை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பவில்லை.
தமிழை படைத்தவன் என்றார்கள்
இறைவன் இருப்பதை நம்பினேன்.
இறைவன் இருக்கிறான்.
தமிழை படைத்தவன் இறைவனாக தான் இருப்பான்.

கர்வம்

நான் கர்வம் கொள்ளக் கூடாது என்றிருந்தேன்
என் தமிழின் சிறப்பையும், என் தமிழனின் பெருமையும் கேட்கும் வரை.